உலகம்
உலக பார்வையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தென்கொரியா
தென்கொரிய அரசாங்கம், பொதுமக்களின் வயதைக் கணக்கிடும் தமது பாரம்பரிய முறைமையை சர்வதேச தரத்துக்கு மாற்றியதையடுத்து, அந்த நாட்டு மக்களின் வயது ஒன்று அல்லது இரண்டு வருடங்களால் குறைவடைந்துள்ளது.
தென் கொரியர்களின் அன்றாட வாழ்வில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வயது கணக்கீட்டு முறைமையின் கீழ், குழந்தைகள் தாயின் கருவில் செலவிட்ட காலப்பகுதி ஒரு வயதாக கணக்கிடப்பட்டு வந்தது.
அதன்படி, பிறக்கும்போதே குழந்தைக்கு, ஒரு வயது என கருதப்பட்டது. அத்துடன் அவர்களின் உண்மையான பிறந்தநாளை விடுத்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம்; திகதியே பிறந்த நாளாகவும் கருதப்பட்டுள்ளது.
இந்த வயது கணிப்பீட்டி முறையின் கீழ் டிசம்பர் 31 ஆம் திகதி பிறந்த குழந்தைக்கு, ஜனவரி முதலாம் திகதியாகும்போது இரண்டு வயதாக இருக்கும்.
எவ்வாறாயினும், அந்த நாட்டில் இன்று முதல் சர்வதேச வயது கணிப்பீட்டு முறைமை பின்பற்றப்படுகிறது. இதன்படி அனைத்து நீதித்துறை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் புதிய வயதே பயன்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2022 செப்டம்பரில் நடத்தப்பட்ட அரசாங்க கணக்கெடுப்பின்படி, 86 சதவீதமான தென் கொரியர்கள் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது சர்வதேச கணிப்பீட்டு முறைமையிலான வயதை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர்.