Connect with us

உலகம்

சுற்றுலாதளமாக மாறிவரும் சவூதி

Published

on

2022 ஆம் ஆண்டில் 15.6 மில்லியன் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவை பார்வையிட்டனர்.

2022 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த சிறந்த நாடுகளில், உலக சுற்றுலா அமைப்பின் (WTO) குறியீட்டில், 12 இடங்கள் முள்னேறி சவூதி அரேபியா உலகளவில் 13 வது இடத்தைப் பிடித்தது. 2018 ஆம் ஆண்டில் 25 வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பயண நோக்கங்களுக்காகவும் சவூதி அரேபியாவுக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிககை 2002 இல் 15.6 மில்லியனை எட்டியது என்று உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது.)

உலக வர்த்தக அமைப்பால் வெளியிடப்பட்ட மே 2023க்கான WTD அறிக்கையின் படி சர்வதேச சுற்றுலா வருவாய் குறியீட்டில் சவூதி அரேபியா 2022 இல் 11 வது இடத்தைப் பிடித்தது. 2019 இவ 27 வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பல்வேறு நோக்கங்களுக்காக சுமார் 7.8. மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் சவூதி அரேபியாவுக்கு வந்து சென்றுள்ளனர், சுற்றுலாத துறையில் சவூதி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதை இது தெளிவு படுத்துகிறது.இது 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இது சுற்றுலாத் துறையின் அதிகபட்ச காலாண்டு செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.

உலக வரத்தா அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி இந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் சவூதி அரேபியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் சவூதி அரேபிய அரசாங்கத்தினதும் இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முற்ஹம்மத் பின் எஸ்மான அவர்களதும் வழிகாட்டலானது சுற்றுலாத்துறையில் சவூதி அரேபியாவின் சாதனைக்கும். உவசு சுற்றுவா துறையில் சவூதி அரேபியாவின் நிலையை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது என்று கூறினார். பயண விசா ஒழுங்கு முறைகள், விளம்பரப் பிரச்சாரங்கள் மற்றும்

சுற்றுலாத் தலங்களின் பன்முகத்தன்மை ஆகியவையும் இந்த சாதனைகளுக்கான பெரும் காரணங்களாக அமைந்தன குறிப்பிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *