உலகம்
ADB 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் தென்கொரியா செல்கிறார்
எதிர்வரும் மே மாதம் 2-5 வரை நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தென்கொரியாவிற்குச் செல்லவுள்ளார்.நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய உலக வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட சுமார் 3,000-4,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் உயர்மட்ட நிகழ்வாக இந்த வருடாந்தக் கூட்டம் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.மே 4, 2023 அன்று ஆளுநர்களின் வணிக அமர்வில் வெளிவிவகார அமைச்சர் இந்த காலகட்டத்தில் ஏனைய தலையீடுகளில் ஒரு அறிக்கையை வழங்குவார் என அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தற்போதைய ஈடுபாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக பல நாடுகளின் சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.