உலகம்
நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இது 7.1 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் கடற்பரப்பை அண்மித்த பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.
எனினும் நியூஸிலாந்தை அண்மித்துள்ள அவுஸ்திரேலியாவுக்கு இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.