Connect with us

Uncategorized

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13568.75 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன

Published

on

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடுமையான அடை மழை காரணமாக விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறுவடை காலம் ஆரம்பித்துள்ளமையினால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மழை காரணமாக 4944 விவசாயிகளின் 13568.75 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் களுவாஞ்சிக்குடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 158 விவசாயிகளின் 308 ஏக்கர் வயல் நிலங்களும், கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 443 விவசாயிகளின் 1,400.5 ஏக்கர் வயல் நிலங்களும், வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 6 விவசாயிகளின் 15 ஏக்கர் வயல் நிலங்களும், பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 94 விவசாயிகளின் 238.25 ஏக்கர் வயல் நிலங்களும், ஆரையம்பதி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 61 விவசாயிகளின் 149.5 ஏக்கர் வயல் நிலங்களும், கல்லடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 137 விவசாயிகளின் 510.5 ஏக்கர் வயல் நிலங்களும், மண்டபத்தடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 1,094 விவசாயிகளின் 3,615.5 ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.

மேலும் ஆயித்தியமலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 112 விவசாயிகளின் 310.75 ஏக்கர் வயல் நிலங்களும், கரடியனாறு கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 386 விவசாயிகளின் 1,462 ஏக்கர் வயல் நிலங்களும், ஏறாவூர் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 181 விவசாயிகளின் 513 ஏக்கர் வயல் நிலங்களும், வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 35 விவசாயிகளின் 121.25 ஏக்கர் வயல் நிலங்களும், கிரான் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 1,152 விவசாயிகளின் 2,437 ஏக்கர் வயல் நிலங்களும், தாந்தாமலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 8 விவசாயிகளின் 35 ஏக்கர் வயல் நிலங்களும், வாகரை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 750 விவசாயிகளின் 1,362.75 ஏக்கர் வயல் நிலங்களும், வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 327 விவசாயிகளின் 1,089.75 ஏக்கர் வயல் நிலங்களும் பாதிப்படைந்துள்ளன.

கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் பூரணமான தகவல்கள் அல்ல எனவும் பெய்து வரும் அடைமழை காரணமாகவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பூரணமான தகவல்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆய்வுக்குழு தமது பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.