Connect with us

Uncategorized

நியூசிலாந்தில் கேப்ரியல் புயல்…

Published

on

நியூசிலாந்தில் கேப்ரியல் புயல் கடற்கரையை நெருங்குகிறது. புயல் காரணமாக மிகப்பெரிய நகரமான ஓக்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கேப்ரியல் தற்போது ஆக்லாந்திற்கு வடகிழக்கே 200 கி.மீ. தொலைவில் அமர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று ஆக்லாந்து மற்றும் மேல் வடக்கு தீவு முழுவதும் பல பள்ளிகள் மூடப்பட்டன,

மேலும் மக்கள் முடிந்தால் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கிழக்கு கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 4

6,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, சில பகுதிகளில் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேப்ரியல் புயல் வட தீவு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பெரும் கடல் சீற்றங்களை ஏற்படுத்துவதால், நியூசிலாந்து அரசு வரலாற்றில் மூன்றாவது முறையாக அங்கு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.