உலகம்
உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!
துருக்கி-சிரியா பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12,391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது.50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடும் பனிப்பொழிவுக்கு இடையே கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.