உலகம்
சிலியில் காட்டுத்தீ – 23 பேர் பலி

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.காட்டுத்தீ 150 ற்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சிலி அரசாங்கத்தினால் நாட்டின் சில பகுதிகளுக்கு அவசரகால நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 544 பேர் காட்டுத்தீயினால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.