உலகம்
அல்-கொய்தா அமைப்புக்கு நிதியளித்த இலங்கை நிறுவனம்
அல்-கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அஹமட் லுக்மான் தாலிப்பின் வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் இரத்தினக் கற்கள் நிறுவனம், தாலிப் மீது அமெரிக்காவினால் தடை ஏற்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட பிறகும் வணிகத்தைத் தொடர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச பாதுகாப்பு மற்றும் வர்த்தக உளவுத்துறை நிறுவனமான கரோன் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
தாலிப்புடன் அவருக்குச் சொந்தமான ஒரு இரத்தினக் கல் வணிகம், 2020 அக்டோபரில் அமெரிக்க திறைசேரியால் தடைசெய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் 2021 இல் அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்யப்பட்டார்.இந்தநிலையில் இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு இரத்தினக்கல் வர்த்தக நிறுவனம், அல்-கொய்தாவுக்கு நிதியளிக்கும் தாலிப்புக்கு வருவாயை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குதாரராக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த வர்த்தக நிறுவனம் இலங்கையின் தென்மேற்கு கரையோர பிரதேசத்தில் வசிக்கும், முகமது ஹாரிஸ் நிஸார் என்பவரின் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 9 ஆம் திகதி இந்நபருக்கு அமெரிக்காவினால் தடைவிதிக்கப்பட்டது
இலங்கையை தளமாகக் கொண்ட இந்த இரத்தினக் கல் வர்த்தக நிறுவனம் 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களை அவுஸ்திரேலியாவில் உள்ள தாலிப்பின் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.அத்துடன், இலங்கையில் அவுஸ்திரேலிய தாலிப் மற்றும் இலங்கையின் நிஸார் ஆகியோரின் வணிகக் கொடுக்கல் வாங்கல்கள் 2018 முதல் வருடத்திற்கு கிட்டத்தட்ட 200,000 டொலர்களை லாபமாக ஈட்டியுள்ளன.இந்தநிலையில் 2021 இல் அமெரிக்க அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பின்னரும், இந்த இரத்தினக்கல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பி வந்துள்ளது
தாலிபின் அல்-கொய்தா வலையமைப்பின் சர்வதேச பாதை தென் அமெரிக்கா வரை நீண்டுள்ளது.
அல்-கொய்தாவின் நிதியாளர் அஹ்மத் தாலிப் பிரேசிலை தளமாகக் கொண்ட Ottoman Trade Caravan நிறுவனத்தின் நிர்வாகப் பங்காளியாகவும் செயற்பட்டார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Continue Reading