உலகம்
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய வானூட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, ரிக்டர் அளவில் 7.0 ஆக நேற்று மாலை நிலநடுக்கம் பதிவானதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
எனவு மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.