உலகம்
ஹெலிகொப்டர்கள் விபத்தில் நால்வர் பலி!

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன், இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 6 பேர் லேசான காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.