Connect with us

Sports

மீண்டும் நடைபெறுமா !உலகக்கிண்ண இறுதி போட்டி

Published

on

நடந்து முடிந்துள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்றிய போலந்து நடுவர் Szymon Marciniak உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் பாரிய தவறு ஒன்றினை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி பெற்ற பிறகு நடுவரின் முடிவுகளுக்கு எதிராக பிரான்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளது.போலந்து நடுவர் ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் போலந்து நடுவர் மார்சினியாக் ஆவார்.

ஏற்கனவே இங்கிலாந்து நடுவர் அந்தோனி டெய்லர் ஒரு பக்கச் சார்பாக நடந்துகொள்வார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக போட்டியின் நடுவராக இருக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு மாற்றாக மார்சினியாக் நியமிக்கப்பட்டார்

இவ்வளவு பெரிய போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக மார்சினியாக்கை பல கால்பந்து ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.ஆனால் அவர் பிரான்ஸ் ரசிகர்களின் பெரும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார். மூன்று கூடுதல் வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்தபோது அர்ஜென்டினா வீரர்கள் ஃபிஃபா விதியை மீறி மெஸ்ஸியின் கூடுதல் நேர கோலை அனுமதித்ததற்காக பிரெஞ்சு ரசிகர்களும் ஊடகங்களும் அவரை விமர்சிக்கின்றன
மேலும், இறுதிப் போட்டியை மீண்டும் விளையாட பிரான்ஸ் ரசிகர்கள் மனுவில் சுமார் 2 இலட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *