உலகம்
மாணவனை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம், சந்தேக நபர் கைது.
இவ்வருட பொதுப் பரீட்சையில் 09 சித்திகளைப் பெற்ற கண்டி அம்பிட்டிய புனித பெனடிக் கல்லூரியின் 17 வயதுடைய மாணவனுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் குறித்த மாணவன் தனது சிறந்த பெறுபேறுகளை பாட்டிக்கு தெரிவிப்பதற்காக தனது தந்தையுடன் பாட்டியின் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வீடு திரும்பிய மாணவனின் தந்தையை பணத்துக்காக தாக்க முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்போது, குறித்த மாணவன் தனது தந்தை தாக்கப்படுவதை தடுக்க முற்பட்ட போது, சந்தேக நபர் விளக்கில் இருந்த எண்ணெயை மாணவியின் உடலில் தெளித்து, தான் வைத்திருந்த பந்தத்தால் தீ வைத்து எரித்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான மாணவன் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் கப்பம் வசூலிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கும்பல் குறித்து முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்த மக்கள் கடும் துன்புறுத்தலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் கும்பல் குழு பற்றிய தகவல்களை வெளியிடத் தயங்குவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னரும் குறித்த மாணவனின் தந்தை, சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்காத நிலையில், சந்தேக நபரை அடையாளம் காண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.