உலகம்
ஆடைக்குறித்து சர்ச்சைக்குரிய பாடல் வெளியிட்ட ஈரான் ரெப் இசைப் பாடகருக்கு மரணதண்டனை
ஈரானிய ரெப் இசைப் பாடகரும் புரட்சியாளருமான டூமேஜ் சலாஹி, “பூமியில் வன்முறையை தூண்டினார்” என்று குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை அதிகாரி ஒருவர் ஈரானிய அரச சார் ஊடகங்களுக்கு இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளார்,
அவரது வழக்கு சரியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று உரிமைக் குழுக்களின் கூற்றுக்களை அவர் மறுத்துள்ளார்.
ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக சலேஹி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது பொதுவாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்று அந்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக கைது செய்யப்பட்ட பல உயர்மட்ட ஈரானியர்களில் இவரும் ஒருவராவார்.
பிரபல ரெப் இசைப்பாடகரான இவர் ஈரானிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பிரபலமான கையாகக் காணப்பட்டார்.
ஒக்டோபரில் இவர் கைது செய்யப்பட்டமையானது இரண்டு மாதங்களுக்கும் மேலாக அரச எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து, பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறைகளை மீறி பெருமளவு இளைஞர்கள் ஒன்று கூட வழிசமைத்ததோடு பரவலான முறையில் கடும் சீற்றத்தோடு போராடவும் வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குர்திஷ்-ஈரானிய பெண் மஹ்சா ஆமினி, 22, செப்டம்பரில் அறநெறி போலீஸ் காவலில் வைத்து இறந்ததால் இந்தப் போராட்டங்கள் தூண்டப்பட்டன. ஆமினி “முறையற்ற முறையில்” ஹிஜாப் அணிந்ததற்காக தெஹ்ரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சலேஹியின் முதல் விசாரணை நடைபெற்றதாகவும், அவரது வழக்கறிஞர் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஈரானிய ரெப் இசைப் பாடகர் டூமாஜ் சலேஹி மற்றும் ஈரானில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்ட குழந்தைகள் அடங்கிய பதாகைகளுடன் இஸ்தான்புல்லில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துள்ளனர்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவரது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் பல இசை வீடியோக்களை வெளியிட்டதோடு மக்கள் அரச அடக்குமுறைக்கெதிராக தெருவில் இறங்குவதையும் ஆதரித்திருந்தார்.
ஒரு பாடலில், “காற்றில் பாயும் முடி” என்ற “குற்றம்” பற்றி அவர் குறிப்பிட்டார் – இது ஈரானின் கடுமையான ஆடைக் குறியீட்டைக் குறிக்கிறது, இது பெண்களுக்கு முக்காடு கட்டாயமாகும். என்ற ரீதியில் பாடப்பட்ட பாடலாகும்.
சலேஹியின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், நியாயமான நீதி வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர், இது ஆட்சியை விமர்சிப்பவர்களுக்கு பொதுவான நிகழ்வாகும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் 50 பேர் இவரின் வீட்டில் சோதனை நடத்தியதாகவும் சலேஹி ஒரு காரின் பின்புறத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் அவர் கைது செய்யப்பட்ட பிறகு பரவலாகப் பரப்பப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.