Sports
இலங்கையணியின் போராட்டம் வீண்

T20 உலகக் கிண்ண தொடரின் இலங்கை அணிக்கு எதிரான சுப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணி இறுதி ஓவர் வரை போராடி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மார்க் வுட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய எலக்ஸ் எல்ஸ் அதிகபட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டொக் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் லஹிரு குமார, வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் அதேவேளை, அவுஸ்திரேலியா அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பறிபோகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி குழு 1 இல் அரையிறுதி வாய்பை பெற்று கொண்டதுடன் அவுஸ்திரேயாவுக்கு T20 உலக கிண்ண தொடரில் இருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.