Connect with us

Sports

“தைரியமாக உலகத்தை வெல்ல வேண்டும்”

Published

on

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கையணி ஆசிய கிண்ணத்தை வென்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணம் (கிரிக்கெட்), வலைப்பந்தாட்டம் மற்றும் பொது நலவாய போட்டிகளில் சாதித்த வீர,வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

“இலங்கையணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்விக் கண்டது ஆனால் தொடரை வென்று சாம்பியன் ஆனது. ஆகவே பயமில்லாமல் தைரியமாக உலகத்தை வெல்ல வேண்டும்” என்றார்.