உலகம்
சீனாவில் விமான விபத்து – 133 பயணிகளின் நிலை என்ன?
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
BBC செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு சென்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விமானம் விபத்துக்குள்ளானகியுள்ளது.
இந்தன் போது விமானத்தில் பெரும் தீ பவிபத்து எற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த 12 வருடங்களின் பின்னர் இது போன்ற விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.