தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை செப்டம்பர் 06 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிற்துறைக்கு செல்வோர், வீதித் தடைகள் இடப்பட்டுள்ள...
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீண்டும் ஆரம்பித்துள்ளன. மருந்துகள் தேவைப்படும் நோயாளர்கள் தாம் சிகிச்சை பெற...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நவம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் தடுப்பூசியேற்ற முடியும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கியுபத் தூதுவர் அன்ட்ரெஸ் கரிடொவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயத்தைச்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடனான கலந்துரையாடலில் இந்த...
காபூல் விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், காபூல்...
ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனி மூட்டம் நிலவி வருகிறது. வளைவுகள் நிறைந்த இந்த வீதிகள் மழையுடன் வழுக்கும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகன சாரதிகள்...
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி...
ஆசிரியர்கள்- அதிபர்கள் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமானதாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்ட பின்னர் குறித்த...
தற்போது அமுலில் உள்ள ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பில் இதுவரை 50 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்க படையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலைய பிரதான...