சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு...
தொடரும் கன மழை காரணமாக நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிப்பதுடன் நீர்தேக்க கரையோர பிரதேசத்தில் நடமாடுபவர்கள் அவதானத்துடன்...
பத்தனை மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து உயிரிழந்த 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான இராமசாமி காளியம்மாவின் இறுதிக் கிரியைகளுக்காக, நுவரெலியா மாவட்ட அனர்த்த நிவாரண நிலையம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கமைய, 25,000 ரூபாய் பணம், உயிரிழந்த...
எரிபொருள் விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக பாராளுமன்றத்தில் முன்கூட்டியே கூறியிருந்தோம் என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்து அமைச்சின் ஊடாக...
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. அத்துடன், ஜி.எஸ்.பி...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது. இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6...
எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கோதுமை மாவு கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அவற்றை...
ஒக்டோபர் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (03) உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.