வானிலை
வானிலையில் நாளை முதல் மாற்றம்…!

நாட்டின் தற்போதைய வறட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலன செயற்பாட்டின் விளைவாக வடக்கு மாகாணத்தில் நாளை முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மழைக்குச் சாத்தியம் காணப்படுகின்றது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கிழக்கு ஊவா மற்றும் வட மாகாணங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.