வானிலை
இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்யும் !
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading