வானிலை
பங்களாதேஷில் நிலநடுக்கம் பதிவு..!
பங்களாதேஷில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் சில்ஹெட்டில் (Sylhet) இன்று காலை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 தசம் 8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, குறித்த பகுதியில் பலத்த மழை பெய்ததுடன் தொடர்மாடியில் வசிப்பவர்கள் குடியேற்றங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.