Sports
சவூதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ரோய்ஸ் அன்பளிப்பு விவகாரம் பாகிஸ்தான் மருத்துவர் கிளப்பிய வெறும் வதந்தி
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய சவுதி அரேபிய அணிக்கு அரச குடும்பம் ரோல்ஸ் ரோய்ஸ் கார்களை பரிசாக வழங்கியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரிடம் இருந்து சவுதி கால்பந்து அணியின் வீரர்கள் ரோல்ஸ் ராய் கார்களை பரிசாக பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகின.
ஆனால், சவுதி அரேபிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர், அத்தகைய பரிசு வழங்கப்பட மாட்டாது என்றும், இன்னும் இரண்டு முக்கியமான போட்டிகள் இருப்பதால், அத்தகைய பரிசு எதையும் பெற இது வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
மேலும் சவூதி கால்பந்து அணியின் வீரர்களும் தங்கள் அணி நாட்டுக்கு சேவை செய்ய கத்தாரில் இருப்பதாகவும், அதை சிறந்த முறையில் செய்வதே உண்மையான வெகுமதி என்றும் கூறுகிறார்கள்.
எவ்வாறாயினும், அர்ஜென்டினா அணியின் தோல்வியால் சவூதி அரச குடும்பம் கால்பந்து அணிக்கு ரோல்ஸ் ரோய்ஸ் கார்களை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் பல் மருத்துவர் ஒருவர் தனது சமூக ஊடகங்கள் மூலம் முதலில் தெரிவித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.