உலகம்
இன்று முதல் குறைவடையும் அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலைகள்.
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 9 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் புதிய விலை 229 ரூபாவாகும் எனவும் இலங்கை சதொச தலைவர் பசாத யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கோதுமை மாவும் இன்று முதல் 14 ரூபாவினால் குறைக்கப்படும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதன் புதிய விலை 265 ரூபாயாகும். ஒரு கிலோ பூண்டின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்படுவதாகவும், ஒரு கிலோ பூண்டு 495 ரூபாவிற்கு இன்று முதல் கிடைக்கும் எனவும் லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையும் 43 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதே கிலோ 255 ரூபாவிற்கு இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
உள்ளூர் பெரிய மீன் டின் ஒன்றை இன்று முதல் 540 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் பசாத யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.