நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் கேஸ் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் கேஸ் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,199 ரூபா ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபா ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.