நியூயோர்க்கில் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் மாரிஸ் பெய்னைச் சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பரந்த அளவிலான பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசனின் வாழ்த்துக்களை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரிடம் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பெய்ன், இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்ட கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் பிரதமர் தனிப்பட்ட முறையில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். தொழிற்கல்வியில் அவுஸ்திரேலியாவின் அனுபவத்தைக் குறிப்பிட்ட அமைச்சர்பீரிஸ், இந்தப் பகுதியில் உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை மிகுந்த ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டார். ஆட்கடத்தல் தொடர்பாக குறிப்பிடுகையில், இது ஒரு மனிதாபிமான துயரம் என்றும், இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதில் இலங்கை அரசாங்கம் கணிசமான பங்கைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியிலும் நல்லிணக்கத்திலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அமைச்சர் பெய்னிடம் தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான முன்னேற்றங்கள், தற்போதைய நிலவரத்தை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்தல் மற்றும் செயன்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை அடையாளம் காணுதல் போன்றன குறித்தும் அவர் விரிவாக விவரித்தார். உள்ளூர் நிறுவனங்கள் அவற்றின் ஆணைகளை நிறைவேற்றுவதற்கான இடத்தையும் வாய்ப்பையும் அளிப்பது அவசியம் என்றும், இந்தப் பணியை மீறும் தற்காலிக வெளிப்புறப் பொறிமுறையொன்றை நிறுவுவது தேவையற்றதும், தீங்கு விளைவிக்கவல்லதும் ஆகும் என்றும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணான வகையில், இலங்கையைத் தேர்ந்தெடுத்து இலக்கு வைக்கும் ஒரு பொறிமுறையைக் கொண்டிருப்பது முதிர்ச்சியற்றதும், பொருத்தமற்றதுமாகும். அவுஸ்திரேலியாவில் மிகவும் அருமையான மற்றும் குறிப்பிடத்தக்க புலம்பெயர்ந்தோர் இருப்பதாக அமைச்சர் பெய்ன் குறிப்பிட்டார். அமைச்சர் பீரிஸால் கோடிட்டுக் காட்டப்பட்ட பகுதிகளில், குறிப்பாக உளவுத்துறைப் பகிர்வு மற்றும் கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பை அவர் வரவேற்றார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான அன்பான மற்றும் நட்புறவான உறவை மேலும் மேம்படுத்துவதற்காக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
கனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிப் பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அவருக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தனது சொந்த தொகுதியான...
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜயந்த கெட்டகொட நியமனம் இடம்பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது 22,97,94,207 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,64,34,168 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 இலட்சத்து 12...
2021-22 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இலங்கை...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கிரேம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 93 பேர் உயிரிழந்துள்ளனர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 505,327 ஆக...
ஸ்பெயின் லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் நேற்று திடீரென சீற்றம் ஏற்பட்டது. கரும்புகையுடன் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு...
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்....