Connect with us

உள்நாட்டு செய்தி

ஆசை காட்டி மோசம் செய்ய வேண்டாம்:ஜீவன்

Published

on

கூட்டுஒப்பந்தம் விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையினை காட்டி மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைசச்ர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் தியஸ்ரீகம பகுதியில் அம்பகமுவ உப பிரதேச செயலாளர் காரியாலயத்தினை திறந்து வைத்து ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.