Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.50 கோடியாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.50 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 27,50,07,340 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,66,74,845 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53 லட்சத்து 70 ஆயிரத்து 190 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,29,62,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 88,733 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்த்துக்கல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.