உள்நாட்டு செய்தி
அவசரமாக மூடப்படும் நகரங்கள்

பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18.08.2021 தொடக்கம் தொடர்ந்து ஒரு வார காலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பதுளை நகர வர்த்தக நிலையங்கள் மூடப்படவுள்ளன.
இதேவேளை பண்டாரவளை நகர வர்த்தக நிலையங்கள் கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாளை 16 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.