உள்நாட்டு செய்தி
பாண் விலை கூடுமா?

பாண் இறத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இப்போதைக்கு இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லவந்த அழகியவண்ணவுடன் (01) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலையை குறைக்க அரசாங்கம் தலையீடு செய்ய தவறினால் எதிர்வரும் திங்கட்கழமை முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.