உலகம்
எவரேனும் சீனாவை ஒடுக்க நினைத்தால் அவர்களின் தலை நசுக்கப்படும்: சீன ஜனாதிபதி

எவரேனும் சீனாவை ஒடுக்க நினைத்தால் அல்லது செல்வாக்கு செலுத்த நினைத்தால், அவர்களின் தலை நசுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஸீ ஜிங்பிங் (Xi Jinping) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு விழா பெய்ஜிங் நகரின் Tiananmen சதுக்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பெய்ஜிங்கில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 70,000 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.