Connect with us

உள்நாட்டு செய்தி

கடந்தவைகள் குறித்து பேசி நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியாது – ரணில்

Published

on

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக இன்று (23) காலை சத்தியப்பிரமானம் செய்துக்கொண்ட ரணில், அமைச்சர் பந்துல தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளித்து பேசிய போதே இதனை கூறியுள்ளளார்.

கடந்தவைகள் குறித்து பேசி நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியாது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட தயங்கினால் அதற்கான மாற்று வழி என்ன என்பதை கூற வேண்டும். நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவை குறித்து பேச சந்தர்பமளியுங்கள்.
தற்போதைய கொவிட் செயலணியை முன்கொண்டு செல்ல முடியாது. அரசியலைமைப்பின் பிரகாரம் அந்த பொறுப்பு அமைச்சரவைக்கே இருக்க வேண்டும்.