Connect with us

உள்நாட்டு செய்தி

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இதுதான் காரணம்

Published

on

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் வெளியாகியது.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தனிப்பட்ட தகராறினால் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மணல் மணல் ஏற்றும் லொறியின் சாரதி ஒருவர் உயிரிழந்தார்.

35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரிக்கும், மணல் லொறியின் சாரதிக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே இந்த சம்பவத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று (22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான மரண விசாரணைகளும் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை, தனது வீட்டுக்கு முன்னாள் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.