உள்நாட்டு செய்தி
டீசலை அருந்திய குழந்தை பலி..!

ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் 9 மாதங்களுமான ஆண் குழந்தை டீசலை அருந்திய உயிரிழந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி குழந்தையின் தந்தை தமது உழவு இயந்திரத்தில் திருத்த பணிகளில் ஈடுபட்டதன் பின்னர் அதிலிருந்த டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதன்போது, அங்கு வந்த குழந்தை குளிர்பானமென நினைத்து டீசலை பருகி மயக்கமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.