உள்நாட்டு செய்தி
கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனுகள் நிராகரிப்பு!

கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இன்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களில் காணப்பட்ட முரண்கள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.