உள்நாட்டு செய்தி
சுகாதார அமைச்சகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் .!

இந்த ஆண்டு நடுப்பகுதியில் சுகாதார அமைச்சகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும். கட்டுமானப் பணிகளை துரிதபடுத்த ரூ. 300 மில்லியன் நிதி ஒதுக்கப்படும்.
கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.5 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த கட்டுமானம் திட்டமிடப்பட்டுள்ளது