உள்நாட்டு செய்தி
உர நிதி மானியத்தை வழங்க அமைச்சரவை தீர்மானம்

வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
• 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 25,000 ரூபாய் வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு
• காலபோகக் கூட்டங்களில் தீர்மானிக்கப்படுகின்ற வயல் காணிகளில் மேற்கொள்ளப்படும் வேறு போகப் பயிர்களுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு நிதி மானியத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது