உள்நாட்டு செய்தி
வீதி ஒழுங்கை கடைபிடிக்கும் சாரதிகளுக்கான சலுகை

வீதி ஒழுங்கை கடைபிடிக்கும் சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 412 வீதி விபத்துக்களில் 431 பேர் உயிரிழந்தனர்.
அந்த காலப்பகுதியினுள் நாடளாவிய ரீதியாக 925 பாரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என காவல்துறை கோரியுள்ளது