உள்நாட்டு செய்தி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி, 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், நேற்று (14) மாலை நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு 5 பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.