உள்நாட்டு செய்தி
காலியில் ஆணின் சடலம் மீட்பு

காலி , கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடக்கின்றார் என்று பிட்டிகல பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது, அவர் இடைவழியிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிட்டிகல, கொடாமுன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.