Connect with us

முக்கிய செய்தி

வேலையில்லா பட்டதாரி சங்கத்திற்கு பேராட்டம் நடத்த தடை..!

Published

on

வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டார்களினால் இன்று (04) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொல்துவ சந்தியில் இந்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார்.
அதன்படி, இந்த போராட்ட பேரணியை தடுக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைவாக,

  1. ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரிகள் சார்பாக சுதேஷ் ரூபசிங்க
  2. ஒன்றணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தம்மிக்க முனசிங்க
  3. ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமந்தா கமகே
  4. ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தினுஷா ஏகநாயக்க
  5. ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பூர்ணிமா நதீஷா உள்ளிட்ட ஏனையவர்களுக்கும் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில், உத்தரவை மீறி செயற்பட்டால் போராட்டத்தை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றும், அமைதியைப் பேண இலங்கை பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.