உள்நாட்டு செய்தி
200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா பறிமுதல்…!

வடமராட்சி பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று (4) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலும் கஞ்சா மீட்கப்பட்டது.
மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.