Connect with us

உள்நாட்டு செய்தி

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் பலி…!

Published

on

யாழில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 
நேற்று (03) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். 
 
உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தை பின் பக்கமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார். 
 
இதன்போது, உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.