உள்நாட்டு செய்தி
197 கிலோ கஞ்சாவுடன் யாழில் – இருவர் பொலிஸாரால் கைது..!

யாழ் அனலைதீவுக்கு கடற்பகுதியில் 197.4 கிலோ கிராம் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனலைதீவு – எழுவைதீவு இடைப்பட்ட கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஒரு படகு கடல் பாதுகாப்புப் பணியில் இருந்த கடற்படையின் கவனத்தை ஈர்த்தது. கடற்படை படகை வழிமறித்து சோதனை செய்த போது, 197.4 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.படகில் பயணித்த இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகள் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.படகு, கஞ்சா, கைதானவர்கள் ஆகியோரை ஊர்காவற்துறை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.