உள்நாட்டு செய்தி
சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…!

யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு
விளம்பரம் யாழ் கோப்பாயில் நேற்றையதினம்(23) சிதைந்த நிலையில் (வயது 78) என்ற வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில் அவர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்றையதினம் உருக்குலைந்த நிலையில் அவரது வீட்டு கிணற்றடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.