உள்நாட்டு செய்தி
அமில சந்திரானந்த விளக்கமறியல்..!

பல குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கருதப்படும் அமில சந்திரானந்த, வரும் 24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜ முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட அவரை, இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.