உள்நாட்டு செய்தி
கணேமுல்ல சஞ்சீவ கொலை – விசாரணையில் புதிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், இது கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்கான பழிவாங்கலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவியில் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய வேனில் போலி இலக்கத் தகடுகள் இருந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலும், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கொண்டு வந்த பெண்ணும், அவர்களுக்கு பொதி வழங்கிய நபரும் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸாரில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளான். குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.