வானிலை
வானிலை அறிக்கை..!

நாட்டில் இன்று கடும் வெப்ப நிலை தொடருவதை அடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் காலி, மாத்தறை, களுத்துறை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.