உள்நாட்டு செய்தி
கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பெற யாரும் முன் வரவில்லை..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சலத்தை உரிமை கோர இதுவரை யாரும் முன்வரவில்லை என வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனேமுல்ல சஞ்சீவ, சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் சடலம் அனாதரவாக உள்ளது.
அதேசமயம் மினுவங்கொடையைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி முன்வந்த போதிலும், அவரது குடும்பப்பெயரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சடலம் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனேமுல்ல சஞ்சீவவின் மனைவி உடனிருந்தாலும், அவர் இன்னும் முன்வரவில்லை என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கனேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாழைத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.