உள்நாட்டு செய்தி
மாணவர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்..!

நாட்டில் மாணவர்கள் பலர் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வருடாந்தம் 2,000 முதல் 3,000 புதிய வாய் புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களிடமும் வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்